அகதிகள் விடயத்தில் மீண்டும் முட்டிக் கொள்ளும் ஜேர்மனி அரசியல் கட்சிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அகதிகளை அவர்கள் குடும்பங்களுடன் இணைக்கும் சர்ச்சைக்குரிய நிகழ்வு, மீண்டும் ஜேர்மனி அரசியல் கூட்டணிக் கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அகதிகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இரண்டாண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த தற்காலிக பாதுகாப்பு நிலைமையில் அகதிகளை அவர்களது குடும்பங்களுடன் இணைக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை மெர்க்கல் கூட்டணிக்குள் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக இந்த நடவடிக்கை மெர்க்கலின் கூட்டணிக் கட்சிகளான SPD மற்றும் CSU ஆகிய கட்சிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கை அதிக தாக்கத்தை ஏற்படுத்தப்போவது சிரிய அகதிகள் மீதுதான், காரணம் அவர்கள் போருக்கு தப்பி வந்திருக்கிறார்களே தவிர தனிப்பட்ட முறையில் சித்திரவதைக்கு ஆளாகவில்லை.

இதன் பொருள் என்னவெனில் ஜேர்மனி, சிரியாவுக்கு செல்வது பாதுகாப்பானது என முடிவு செய்யும்போது, அதாவது போர் முடிந்ததும் சிரிய அகதிகள் அவர்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதுதான்.

அதேபோல் ஒரு மாதத்திற்கு ஆயிரம் அகதிகள் மட்டுமே தங்கள் குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கப்படும் பட்சத்தில், இதுவரை 34,000 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முடிய மிக நீண்ட காலம் ஆகும் என்பது இன்னொரு முக்கிய தகவலாகும்.

இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் ஏஜன்சி இந்த நடவடிக்கை வெளிப்படைத் தன்மை இன்றி மேற்கொள்ளப்படுவதாக குறை கூறியுள்ளது.

எதிர்க்கட்சியான கிரீன்ஸ் கட்சி மாதத்திற்கு ஆயிரம் பேரை மட்டுமே குடும்பங்களுடன் இணைப்பது குடும்பங்களை பல வகையிலும் பாதிக்கும் ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.

இப்படி பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மாதத்திற்கு ஆயிரம் குடும்பங்கள் என்னும் எண்ணிக்கை சரியானதுதான் என்று கூறியுள்ள CSUவின் உள் விவகாரச் செயலர் Stephan Mayer, தேர்வு செய்யப்படுபவர்களில் தீவிர நோயுடையவர்கள் அல்லது குறைபாடுகள் உடையவர்களுடன் சிறு வயது பிள்ளைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்