ஜேர்மனியின் பிரபல இரண்டு நிறுவனங்களில் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் மிகப் பெரிய பொது ஒளிபரப்பாளர்களான ZDF மற்றும் WDR இரண்டிலுமே ரஷ்ய ஹேக்கிங் குழுவால் தாக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட குழுவின் நோக்கம் என்ன? மற்றும் முக்கியமான தரவு திருடப்பட்டதா என்பது தெளிவாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

Sandworm என்ற ரஷ்ய ஹேக் குழுவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. ஹேக்கர்கள் ஊடுருவியதை விரைவாக கண்டுபிடித்தாலும், 10 கணினிகளில் ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டு தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், தெளிவான காரணங்களை பாதுகாப்பு கருதி தெரிவிப்பதற்கு, WDR ஒளிபரப்பு நிறுவனம் மறுத்துவிட்டது.

Sandworm என்ற ஹேக்கிங் குழு ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையால் நடத்தப்படுகிறது. இந்த ஹேக்கர் குழுவானது, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணனி சேவையகங்களில் தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்