பண்ணை வீட்டில் பெண்ணின் எலும்புகூடு: கொலையா? தற்கொலையா?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் லோயர் சாக்சனி பகுதியில் பண்ணை வீட்டின் மாடத்தில் எலும்பு கூடு ஒன்று கண்டெடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோயர் சாக்சனி பகுதியில் அமைந்துள்ள தமது தந்தையின் பண்ணை வீட்டினை சீரமைக்கும் பொருட்டு நபர் ஒருவர் அங்கு சென்றுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் அந்த பண்ணை வீடு மிகவும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருந்துள்ளது.

இதனையடுத்து வீட்டை சுத்தம் செய்யும் நோக்கில் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டு வந்த அந்த நபருக்கு மொட்டை மாடியில் சருகுகள் மற்றும் கொம்புகளால் மூடப்பட்ட நிலையில் பெண்கள் பயன்படுத்தும் ஆடைகளின் பகுதி அதிர்ச்சியை தந்தது.

அந்த ஆடைகளை விலக்கிய அவர் அங்கு எலும்பு கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். தமது தந்தையின் இந்த பண்ணை வீடு பூட்டப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டதாக கூறும் அவர், அந்த மொட்டை மாடியில் பெண்ணின் எலும்பு கூடு எப்படி வந்தது என்பது புதிராகவே உள்ளது என்றார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் புறப்பட்டு வந்த பொலிசார் அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையின் முடிவில்,

சம்பந்தப்பட்ட எலும்பு கூடு, அப்பகுதியில் இருந்து தலைமறைவான ஒரு மன நலம் பாதிப்புக்குள்ளான பெண்மணியினுடையது என முடிவுக்கு வந்தனர்.

குறிப்பிட்ட பெண்மணி பல முறை தமது வீட்டில் இருந்து இதுபோல புறப்பட்டு சென்றுள்ளதாகவும், அப்படி சென்ற அவர் இரவு தங்கும் பொருட்டு இந்த மொட்டைமாடிக்கு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இருப்பதாக முகாந்திரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி கடும் பனிப்பொழிவில் இருந்து தப்ப முடியாமல் அவர் இங்கு இறந்திருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments