மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன்: மனைவி செய்த அதிரடி நடவடிக்கை

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன் எதிர்பாராதவிதமாக தீயில் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் உள்ள Rudesheim என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 14 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் 3 குழந்தைகளுடன் 45 வயதான கணவன் மற்றும் 31 வயதான மனைவியும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வெளியே சென்றிருந்த கணவன் வீட்டிற்கு திரும்பியதும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு மோசமடைந்ததும் வீட்டில் இருந்த சமையல் எண்ணெய்யை எடுத்து மனைவி மீது கணவன் ஊற்றியுள்ளார்.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் மனைவியை பற்ற வைத்ததும் அவர் வலியால் துடித்துள்ளார்.

அப்போது, கணவன் சிறிதும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் மனைவி கணவனை கட்டி பிடித்ததாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் கணவனுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதும் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் அறிந்த வந்த மீட்புக் குழுவினர் கணவனின் உடலை கட்டி பிடித்திருந்த மனைவியை உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது மனைவி ஆபத்தானை கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கொல்ல முயன்ற கணவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளது தொடர்பான உண்மைக் காரணம் வெளிவராத நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments