யூதர்கள் படுகொலைக்கு துணைப்போன காவலர்: கைது செய்வதற்கு முன்பாக மருத்துவமனையில் மரணம்

Report Print Tony Tony in ஜேர்மனி
யூதர்கள் படுகொலைக்கு துணைப்போன காவலர்: கைது செய்வதற்கு முன்பாக மருத்துவமனையில் மரணம்

ஜேர்மனியின் நாசிச படைகள் யூதர்களை கொன்று குவித்த செயலுக்கு துணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஒருவர் கைது செய்வதற்கு முன்பாகவே மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டபோது, ஜேர்மன் சர்வாதிகரியான ஹிட்லரின் நாசிச படைகள் லட்சக்கணக்காண யூதர்களை கொன்று குவித்தனர்.

யூதர்களில் சிலர் சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

இவ்வாறான Waffen-SS என்ற சித்ரவதை முகாமிற்கு Jakob Dencinger(தற்போதையை வயது 92) என்பவர் காவலராக இருந்துள்ளார். இந்த காலத்தில் யூதர்களை கொல்வதற்கு இவரும் துணைப்போனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குரோசியா நாட்டை சேர்ந்த இவர், ஹிட்லருடன் சில காலம் பணியாற்றிவிட்டு அமெரிக்காவிற்கு சென்று 1989ம் ஆண்டு வரை வசித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மீது ஜேர்மனியில் கொலை வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற விசாரணைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு வர முடியாது என மறுத்த அவர் குரோசியாவில் உள்ள Osijek நகர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வரமறுக்கும் அவரை கைது செய்து அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் கடந்த வியாழக்கிழமை அன்று முதுமை காரணமாக மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments