பிரான்சில் கொரோனா வைரஸிற்கான கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்களுக்கு தீவிரமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் தீவிரமாகி வருகிறது. இதனால் மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸிற்கான கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாட்களுக்கு தீவிரமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், பிரான்ஸில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் மாதம்வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும். குறைந்தது அடுத்த 15-வது நாட்கள் வரை கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக மார்சேய் மற்றும் லியோன் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளதால் இங்கு பள்ளிகள் மூடப்பட்டன.
ஊரடங்கு காலகட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று ஏற்பட்டது. சமீபநாட்களாக கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது நினைவுகூரத்தக்கது.