பிரான்சில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
274Shares

பிரான்சில் தற்போது ஏற்படும் இறப்புகள் குறித்து நாட்டின் பிரதமர் Jean Castex முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் தற்போது வரை 19,15,282 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 42,599 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்து பிரான்ஸ் அரசாங்கம் போராடி வரும் நிலையில், பிரான்சில் தற்போது நான்கில் ஒருவர் கொரோனாவால் இறப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இப்போது ஒரு வாரமாக, கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த போக்கு உறுதிப்படுத்தப்பட்டால், அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இரண்டாவது அலையின் உச்சத்தை அடையும் என பிரதமர் Jean Castex குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்