அல்-கொய்தாவின் மூத்த தலைவரை கொன்ற பிரான்ஸ் படைகள்! எப்படி நடந்தது? வெளியான முழு விவரம்

Report Print Basu in பிரான்ஸ்
360Shares

வடகிழக்கு மாலியில் நடந்த இராணுவ நடவடிக்கையின் போது அல்-கொய்தாவின் வட ஆப்பிரிக்கா பிரிவின் இராணுவத் தலைவரான பஹ் அக் மௌசாவை பிரான்ஸ் படைகள் கொன்றதாக ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் மாலியன் இராணுவ படைத்தலைவரான பஹ் அக் மௌசா, பாமௌசா டயரா என்றும் அழைக்கப்படுபவர்.

மாலியின் மிக முக்கியமான தீவிரவாதக் குழுவான Jama'at Nusrat al-Islam wal-Muslimin (JNIM)-ன் தலைவரான ஐயாத் அக் காலியின் வலது கையாக பஹ் அக் மௌசா திகழ்ந்தார்.

JNIM குழு, மாலி மற்றும் அண்டை நாடான புர்கினா பாசோவில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது..

சஹேலில் உள்ள ஜிகாதி இயக்கத்தின் முக்கிய நபரான பஹ் அக் மௌசா, மாலியன் மற்றும் சர்வதேச சக்திகளுக்கு எதிரான பல தாக்குதல்களுக்கு பொறுப்பானவராக கருதப்படுகிறார் என்று பார்லி அறிக்கையில் தெரிவித்தார்.

அமெரிக்க தீவிரவாத பட்டியலில் இருக்கும் மௌசா செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைக்கு பின்னர் கொல்லப்பட்டார்.

இது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய வெற்றியாகும் என்று பார்லி கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்