பிரான்சில் முகக்கவசம் அணிய மறுத்த நபருக்கு நேர்ந்த கதி! கடுமையாக்கப்படுமா விதிகள்? முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் முகக்கசவம் அணிய மறுத்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், 14 மருத்துவர்கள் அடங்கிய குழு முகக்கவசம் அணிவது குறித்து கடுமையான விதிகளை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் கடந்த வெள்ளிக் கிழமை லியோன் மாவட்டத்தின் Hôtel de Ville இரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நபர் ஒருவர் நுழைந்ததால், இதைக் கண்ட பொது போக்குவரத்து அதிகாரிகள், அவரை முகக் கவசம் அணியும் படி கட்டாயப்படுத்தினர்.

ஏனெனில் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்து அதிகாரிகள் குறித்த நபரை முகக்கவசம் அணியும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நபர் அவர்கள் சொல்வதை கேட்க மறுத்ததுடன், அதிகாரிகளை கீழே தள்ளியுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

மேலும், 14 மருத்துவர்கள் கொண்ட அடங்கிய குழு, முகக்கவசம் அணிவது குறித்து கடுமையான விதிகளை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லு பாரிசியன்-அஜூர்டுஹுய் (Le Parisien-Aujourd'hui) என்ற நாளிதழில் வெளியிடப்பட்ட திறந்த கடிதத்தில், பல்வேறு துறைகளில் இருந்து, மக்கள் அடிப்படை சமூக தொலைதூர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த பயனுள்ள மற்றும் அணுகக்கூடிய முறைகள் பயன்படுத்தப்படாவிட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பொது கட்டிடங்களுக்குள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முடிந்தவரை சமூக விலகல் மற்றும் வழக்கமாக கைகளை கழுவ வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

முகக்கவசம் அணிய சற்று சங்கட்டமாக இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டாலும், அவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகக்கவசம் அணிவது உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல், வைரஸ் பரவாமல் தடுப்பதும் ஆகும்; எல்லோரும் அதை அணிந்திருக்கும் வரை என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் இந்த செய்தி பிரதம மந்திரி ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் ஆகியோரிடம் எதிரொலித்தது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் முகக்கவசம் அணியும் படி அவர்கள் வலியுறுத்தியதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்