பிரான்சில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு பிரான்சில் உள்ள Tilloy-lez-Marchiennes கவுன்சிலில் கடந்த சனிக்கிழமை Marie Cau (55) என்பவர் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
தான் ஒரு சமூக ஆர்வலர் அல்ல என்று கூறும் Marie, தான் முனிசிபல் அரசியலில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவிக்கிறார்.
நான் ஒரு திருநங்கையா இல்லையா என்பதற்காக எல்லாம் மக்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறும் Marie, அவர்கள் மேயர் என்ற பொறுப்பிற்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் அவ்வளவுதான் என்கிறார்.
இதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயம் என்று கூறும் Marie, எல்லாரும் எல்லாவற்றையும் சாதாரணமாக பார்க்கத் துவங்கும்போது, நீங்கள் யார், திருநங்கையா இல்லையா என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை என்கிறார்.
