ஊரடங்கு உத்தரவை மீறும் பிரான்ஸ் குடிமக்கள்: இதுவரை விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு மில்லியன் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் எகிறும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குடிமக்களிடம் இருந்து 25 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பின்னர் சுமார் 260,000 பிரெஞ்சு குடிமக்கள் அதை மீறியுள்ளதாக பிரதமர் Edouard Philippe தெரிவித்துள்ளார்.

மேலும், போர் இப்பொழுது தான் தொடங்கி உள்ளது. கடந்த 15 நாட்களை விட, எதிர்வரும் ஏப்ரலின் முதல் 15 நாட்கள் மிகக் கடுமையானதாகவும், கடினமானதாகவும், மோசமானதாகவும் இருக்கும் என்றார்.

ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களிற்குள்ளும், நோய்த்தொற்றின் எண்ணிக்கையும், சாவின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகி வருகின்றது.

இத்தாலியின் பாடங்களை நாம் கற்றுள்ளோம். இதனை முறியடிப்போம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் இருந்து வரும் ஊரடங்கானது எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு 100,000 பொலிஸ் அதிகாரிகளை களமிறக்கியுள்ளது பிரான்ஸ்.

இருப்பினும் கடந்த 11 நாட்களில் மட்டும் 260,000 பேர்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 135 யூரோ முதல் 3,700 யூரோ வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 319 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,314 என அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சுமார் 4,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 37, 575 என பதிவாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்