பிரான்சில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதாரத்துறை பணியார்களுக்காக ஈபிள் கோபுரத்தில் ஒளிரும் அந்த வார்த்தைகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில், பலரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் நிலையிலும், தளராமல் பணியாற்றி வருகிறார்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள்.

அவர்களை உற்சாகப்படுத்த, தங்களுக்காக அயராமல் உழைக்கும் அவர்களுக்கு தங்கள் நன்றியைத் தெரிவிப்பதற்காக பல்வேறு நாடுகள் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு பிரித்தானியர்கள் அனைவரும் தங்கள் வீடுகள் முன் கூடி இரவு எட்டு மணிக்கு கரவொலி எழுப்பி மருத்துவத்துறை முதலான அவசரப்பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தற்போது, பிரான்சில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஈபிள் கோபுரத்தில் சில வார்த்தைகள் ஒளிரச்செய்யப்பட்டுள்ளன. பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் 'Merci' என்ற வார்த்தை ஒளிர்கிறது.

'Merci' என்ற வார்த்தையின் பொருள் 'thank you' அதாவது நன்றி என்பதாகும். அத்துடன் ஆங்கிலத்தில் 'Stay at home' என்ற வார்த்தைகளும் ஒளிர்கின்றன.

மேலும், பிரித்தானிய முன்மாதிரியைப் பின்பற்றி, உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள், தங்கள் ஜன்னல்கள் முன்பும், வாசல்கள் முன்பும் நின்று மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்புவதில் இணைந்துகொண்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்