பிரான்சுக்குள் நுழைந்த மருந்தே இல்லாத தக்காளி வைரஸ்: பயந்த காரியம் நடந்தேவிட்டது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மருந்தே இல்லாத வைரஸ் தொற்று ஒன்று பிரான்சை நெருங்கி வருவதால், தக்காளி, மிளகாய் போன்ற தாவர உற்பத்தி மற்றும் வியாபாரம் பெரும் அபாயத்திலிருப்பதாக பிரான்சின் உணவு மற்றும் சுகாதார ஏஜன்சி சமீபத்தில் எச்சரித்திருந்தது.

தக்காளி பழுப்பு ரூகோஸ் பழ வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தாவர வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வைரஸால் மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், தாவரங்களுக்கிடையே வெகு விரவில் அது பரவக்கூடியது என்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வைரஸ் பாதித்த தாவரங்கள் வேர் முதல் நுனி வரை பாதிக்கப்படும் என்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்நிலையில், பிரான்சின் Finistere பகுதியில் தக்காளி பழுப்பு ரூகோஸ் பழ வைரஸ் நுழைந்தே விட்டது என வேளாண்மை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட ஒரு பண்ணை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அங்கிருந்த மொத்த தக்காளிப் பழங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்