பிரான்சில் தரையில் மோதி வெடித்து சிதறிய விமானம்: 4 பேர் பலி!

Report Print Vijay Amburore in பிரான்ஸ்
303Shares

பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தெற்கு பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு நகரமான கிரெய்செல்ஸில் உள்ள ஒரு விமானநிலையத்திலிருந்து சில மைல்கள் தொலைவில், அங்கோலெமில் இருந்து செல்லும் வழியில் உள்ளூர் நேரப்படி மதியம் 1:00 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விமானி கட்டுப்பாட்டை இழந்ததும், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் விமானி மற்றும் மூன்று பயணிகள் இறந்து கிடந்துள்ளனர்.

விபத்திற்கான காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு விசாரணை ஆணையம் தனது நிபுணர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்