மேயர் வேட்பாளரின் கனவை பாழாக்கிய அந்தரங்க வீடியோ: இளம்பெண் உட்பட இருவர் கைது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
365Shares

பிரான்ஸ் ஜனாதிபதியின் ஆதரவு பெற்ற மேயர் வேட்பாளர் ஒருவரின் கனவை பாழாக்கிய அந்தரங்க வீடியோ வெளியானது தொடர்பாக, இளம்பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் ஆதரவு பெற்ற மேயர் வேட்பாளரான Benjamin Griveaux, இளம்பெண் ஒருவருக்கு ஆபாச வீடியோ மற்றும் செய்திகளை அனுப்பியதாக பிரபலமாகாத இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானதையடுத்து, சமூக ஊடகங்களில் அந்த வீடியோவும் அந்த செய்திகளும் வேகமாக பரவின.

இதனைத் தொடர்ந்து, இப்படி ஒரு அவமானத்தை அனுபவிக்கும் அளவில் எனது குடும்பம் எந்த தவறும் செய்யவில்லை, இதுபோல் யாருமே துஷ்பிரயோகிக்கப்படக்கூடாது என்று வருத்தமுற்ற Griveaux, மேயர் பதவியில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினார்.

அத்துடன், தனியுரிமை மீறல் புகார் ஒன்றையும் அவர் பொலிசாரிடம் அளித்தார். அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டவர் Petr Pavlensky என்னும் சர்ச்சைக்குரிய காரியங்களில் ஈடுபடுவதையே வழக்கமாகக் கொண்ட ஒரு கலைஞர். ரஷ்ய நாட்டவரான Pavlensky, அரசியல் புகலிடம் கோரி பிரான்ஸ் வந்தவராவார்.

STEPHANE DE SAKUTIN / AFP

குடும்ப ஒழுக்கம் குறித்து எப்போதும் பேசக்கூடிய Griveaux, உண்மையில் போலியானவர்.

அவர் கூறும்போது, Griveaux பேசுவது குடும்ப உறவுகளைக் குறித்து, ஆனால் அவர் செய்வதெல்லாம் அவற்றிற்கு நேர்மாறானவை என்று கூறியுள்ள Pavlensky, அவரது முகமூடியைக் கிழித்து அவரது உண்மை முகத்தை உலகுக்கு காட்டுவதற்காகத்தான் அந்த வீடியோ மற்றும் குறுஞ்செய்திகளை தான் வெளியிட்டதாக கூறியுள்ளார்.

அவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவரது காதலியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அந்த இளம்பெண்ணுக்குத்தான் அந்த ஆபாச வீடியோவும், குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், Griveauxஇன் நற்பெயரை கெடுக்கும் வகையிலான வீடியோ வெளியானாலும், அரசியல் தலைவர்கள், வேறொரு கோணத்தில் இந்த பிரச்சனையை அணுகியுள்ளார்கள்.

இது ஒருவரின் அந்தரங்கத்திற்குள் நுழையும் விடயம் என்று கூறி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதற்காக Griveaux மேயர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து விலகத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்