பிரான்சில் டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறதா?

Report Print Basu in பிரான்ஸ்

பெரிய இணைய நிறுவனங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி கட்டணத்தை ரத்து செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளது.

வரி விதிப்பது தொடர்பாக அமெரிக்காவுடனான சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், எங்களுக்கு நேரம் கொடுப்பதும், எங்கள் நல்லெண்ணத்தைக் காண்பிப்பதும், மீதமுள்ள கொடுப்பனவுகளை டிசம்பருக்கு ஒத்திவைப்பதும் நாங்கள் முன்மொழிகிறோம் என்று நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பில் சராசரி நேரத்தில் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு நேரம் கொடுப்பதே இதன் நோக்கம் மற்றும் சர்வதேச வரி விதிகள் மீண்டும் எழுதி மேம்படுத்துவதாகும் என வட்டாரம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இணையக் குழுக்களை நியாயமற்ற முறையில் பாகுபாடு காட்டுவதாகக் கருதும் பிரான்சின் டிஜிட்டல் சேவை வரி மீதான கட்டணங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...