400 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள தயார்: பிரான்ஸ் அறிவிப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கிரீஸிலிருந்து 400 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள தயார் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

குடும்பங்கள் மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் நிலைமையிலிருப்போருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரான்சின் துணை உள்துறை அமைச்சரான Laurent Nunez தெரிவித்துள்ளார்.

கிரீஸ் புலம்பெயர்தல் துறையில் அமைச்சராக உள்ள Giorgos Koumoutsakosஉடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்வோரை அழைத்துச் செல்லும் முன் ஆயத்தங்கள் செய்வதற்காக பிரெஞ்சு நிபுணர்கள் குழு ஒன்று கிரீஸ் வர இருப்பதாகவும் தெரிவித்த Nunez, புலம்பெயர்வோரை அழைத்துச் செல்லும் பணி இந்த கோடைக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வெளியரங்கமாக செய்யப்படாத, ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து கூட்டாக செயல்படும் நடவடிக்கை இது என்றார் அவர்.

இது போக 24 புகலிட நிபுணர்களையும் பிரான்ஸ் அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கையும் அவர்கள் கிரீசை சந்திக்கும் முறைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...