பிரித்தானியரை கொலை செய்துவிட்டு தொலைக்காட்சி பிரபலமான தம்பதி: 20 ஆண்டுகளுக்குப்பின் கைது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியர் ஒருவரை கொலைசெய்துவிட்டு தப்பியோடி, வேறொரு நாட்டுக்கு சென்று தொலைக்காட்சி பிரபலமாக மாறிய ஒரு தம்பதியினர், 20 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1996ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி, சர்ரேயைச் சேர்ந்த Marcus Mitchell பெல்ஜியத்திலுள்ள De Haan என்ற இடத்திலுள்ள காட்டில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

தொடர்ந்து நடந்து வந்த விசாரணையில் பிரான்சைச் சேர்ந்த Jean-Claude Lacote (53) என்பவர், பண மோசடி செய்து Marcusஐ ஏமாற்றியதும், அதை அவர் கண்டுபிடித்துவிட்டதால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டதும் 2011ஆம் ஆண்டு தெரியவந்தது.

கொலை செய்த Lacoteம் அவரது மனைவி Hilde Van Acker (56)ம் பின்னர் கப்பல் ஒன்றில் ஏறி பிரித்தானியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது.

பின்னர் பெல்ஜியத்தில் இருவரும் கைது செய்யப்பட்டாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்கள்.

அங்கிருந்து தப்பிய தம்பதி, பிரேசிலுக்கும் அதன் பின் தென்னாப்பிரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

தம்பதி தென்னாப்பிரிக்காவில் செட்டில் ஆக, Lacote ஒரு ரியாலிட்டி கிரைம் நிகழ்ச்சி ஒன்றி தயாரித்து பிரபலமாகியிருக்கிறார்.

தற்போது Marcus கொலை வழக்கில் தம்பதி மேற்கு ஆப்பிரிக்க நாடான Ivory Coastஇல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இல்லாமலே அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருவரையும் பெல்ஜியம் கொண்டுவரும் நடவடிக்கைகளில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்