பிரான்சில் 16 வருடங்களில் இல்லாத அளவிற்கு நிலநடுக்கம்... நான்கு பேர் காயம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும், சில கட்டிடங்களில் வெடிப்பு நிகழ்ந்ததால், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியமான Montélimar நகரில் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது, நண்பகல் வேளையில் Teil எனும் பிராந்தியத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து Ardèche நகரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4-ஆக பதிவானது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், சிலர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு உதவிகளை மேற்கொண்டனர். கடந்த 2003-ஆம் ஆண்டு 5.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பிரான்சில் பதிவானது. அதன் பின்னர் இடம்பெறும் மிகப்பெரும் நிலநடுக்கம் இது என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers