ஆங்கிலக் கால்வாயில் சிக்கித்தவித்த ஒரு புலம்பெயர்வோர்: காப்பாற்ற களமிறங்கிய 2000 பேர் பயணிக்கும் கப்பல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆங்கிலக் கால்வாயில் சிக்கித் தவிக்கும் ஒரு புலம்பெயர்வோரைக் கண்ட 2000 பேர் பயணிக்கும் கப்பல் ஒன்று, அதிரடியாக U - Turn எடுத்து அவரைக் காப்பாற்ற விரைந்தது.

பிரான்சின் கலாயிஸ் துறைமுகத்திலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் புலம்பெயர்வோர் ஒருவர் சிக்கித்தவிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரை மீட்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் மீட்புக் குழுவினர் தொடங்கினர்.

ஆனால் அதற்குள், ஆங்கிலக் கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த Pride of Canterbury என்ற 2000 பேர் பயணிக்கும் பயணிகள் கப்பல் ஒன்றின் ஊழியர்கள் அந்த நபரைக் கவனித்திருக்கிறார்கள்.

உடனடியாக பிரித்தானியாவின் Dover துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அந்த கப்பல் U - Turn எடுத்து பிரான்ஸ் நோக்கி திரும்பியது.

PA MEDIA

அதிலிருந்து மீட்புப் படகு ஒன்று அனுப்பப்பட, மீட்புப் படகிலிருந்தவர்கள் விரைந்து சென்று தண்ணீரில் நனைந்து, மோசமான hypothermia என்ற பிரச்சினையால் அவதியுற்றுகொண்டிருந்த அந்த நபரை மீட்டு கப்பலுக்கு கொண்டு சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அனுப்பிய ஹெலிகொப்டர் ஒன்று அவரை அங்கிருந்து கலாயிசுக்கு அழைத்துச் சென்றது.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முயலும் புலம்பெயர்வோரை எச்சரித்துள்ள அதிகாரிகள், அது மிக அதிக போக்குவரத்து உள்ள பகுதி என்றும், அதை நீந்திக் கடக்க முயல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்