பிரான்சில் பரபரப்பு.. அருங்காட்சியகத்தை சிறை பிடித்த மர்ம நபர்: பொலிஸ் எச்சரிக்கையால் மக்கள் பீதி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் இரவோடு இரவாக மர்ம நபர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியதரைக் கடல் நகரமான செயிண்ட்-ரபேலில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகமே இவ்வாறு மர்ம நபரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அருங்காட்சியகத்தை அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். உள்ளே எத்தனை பேர் இருக்கின்றனர், அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

மர்ம நபர் பொலிசாருடன் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார். அங்கு அரபியில் அச்சுறுத்தும் வகையில் ‘அருங்காட்சியகம் நரகமாக மாறப்போகிறது’ போன்ற செய்திகள் கட்டிடத்தின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன என்று பொலிஸ் வட்டாரம் கூறினார்.

Cannes மற்றும் Saint-Tropez இடையே உள்ள பகுதியைத் தவிர்க்குமாறு ட்விட்டர் செய்தியில் பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர்.

அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு பொலிசார் உத்தவிட்டுள்ளதாக உள்ளுர் வாசிகள் தெரிவித்துள்ளன.

வரலாற்று நினைவுச்சின்னமான இந்த அருங்காட்சியகத்தில் medieval கல் தேவாலயம் மற்றும் பிராந்தியத்தின் ரோமானிய வரலாற்றிலிருந்து ஏராளமான amphoras மற்றும் பிற பொருட்கள் உள்ளன.

முன்னதாக. பொலிசார் அருங்காட்சியகத்தில் ‘உயரடுக்கு’ சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெற்கு பிரான்சில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் கூறினார்.

இதனிடையே, மரம் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், மர்ம நபர் குறித்த தகவல் ஏதும் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்