பிரான்சில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தால் பரிதாபமாக போன உயிர்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் டார்ட்டினெட்டி மின்வண்டி மூலம் விபத்தை ஏற்படுத்திய இளைஞன் இனு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டான்.

கடந்த ஏபரல் மாதம் 12-ஆம் திகதி, டார்ட்டினெட்டி மின்வண்டி மூலம் Levallois-Perret (Hauts-de-Seine) நகரில் வைத்து இந்த விபத்தை ஏற்படுத்தியிருந்தான்.

trottinette வண்டியில் வேகமாக பயணித்த குறித்த இளைஞன் 80 வயதுகளையுடய நபர் ஒருவரை இடித்து தள்ளியிருந்தான்.

இதனால் கீழே விழுந்த குறித்த முதியவர் அதிர்ச்சியில் உயிரிழந்திருந்தார். இல்-து-பிரான்சுக்குள் trottinette மின்வண்டி மூலம் பதிவான முதல் உயிரிழப்பு சம்பவம் இதுவாகும்.

இதனால் கைது செய்யப்பட்ட அவன் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் Nanterre நகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டஅவனுக்கு 50,000 யூரோக்கள் தண்டப்பணமும், ஐந்துவருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த விபத்துக்குப் பின்னர் பரிஸ் நகரசபையினால் trottinette ஓட்டுவதற்கு பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்