பிரான்சில் மசூதியில் மோதிய கார்: தாக்குதலா, தற்கொலை முயற்சியா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கிழக்கு பிரெஞ்சு நகரம் ஒன்றிலுள்ள மசூதி ஒன்றில் கார் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சிலுள்ள Colmar நகரில் கார் ஒன்று மசூதி ஒன்றில் மோதியது. கழுத்தில் காயத்துடன் காணப்பட்ட அந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தாக்குதலா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தெரியவில்லை. Colmarஇலுள்ள Grand Mosque என்னும் மசூதியில் அந்த கார் மோதியதில் மசூதியின் கதவுகள் சேதமடைந்தன.

ஆனால் கட்டிடத்திற்குள் அந்த கார் நுழையாததால், அதிர்ஷ்டவசமாக கட்டிடத்திற்குள்ளிருந்தோர் தப்பியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து ஏராளமான பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டதோடு, அந்த பகுதியில் மக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நபர் தன்னையே குத்திக்கொண்டதால் காயம் ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் அவரை தாக்கினார்களா என்பதும் தெரியவில்லை.

சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்துடன் தொடர்புடையது என கருதப்படும் வீடியோ ஒன்றில், காயமடைந்த சாரதியை பொலிசார் கைது செய்வதை காணலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்