228 பயணிகளை பலி கொண்ட ஏர் பிரான்ஸ் விமான விபத்து: நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

228 பயணிகளை பலிகொண்ட விமான விபத்து தொடர்பாக ஏர் பிரான்ஸ் மற்றும் Airbus நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 228 பயணிகளுடன் பாரிஸ் நோக்கி பயணமான ஏர் பிரான்ஸ் விமானம் AF447, புயலில் சிக்கி அட்லாண்டிக் பெருங்கடல் விழுந்தது.

இதில் விமானத்தின் வேகத்தை கண்காணிக்கும் கருவியானது பழுதானதை அடுத்து விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விமானம் தவறியிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் தற்போது பிரான்ஸ் நீதிமன்றம், ஏர் பிரான்ஸ் மற்றும் Airbus நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை கைவிட்டுள்ளது.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம் என வழக்குத் தொடர்ந்த குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஏர் பிரான்ஸ் வரலாற்றில் மிகவும் மோசமான நிகழ்வாக, இந்த விவபத்து கருதப்பட்டது. மட்டுமின்றி வேகத்தை கணக்கிடும் கருவியானது பழுதான நிலையில், சக விமானி அளித்த தகவல் தவறாக பதிவானதாக புகார் எழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களை மீட்க சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்