பிரான்சில் நிர்வாணமாக ஓடும் போட்டிக்கு குவியும் ஆதரவு... எங்கு தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

நிர்வாணப்பிரியர்களுக்கான ஓட்டப் போட்டி ஒன்றிற்கு பிரான்சில் பொதுமக்களால் மிகுந்த ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.

பிரான்சின் Hauts-de-France நகரைச் சேர்ந்த நிர்வாண பிரியர்களால் இந்த ஓட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வடக்கு மாவட்டமான பா-து-கலேயின் Berck-sur-Mer நகரில் வரும் 22- ஆம் திகதி இந்த போட்டி நடைபெறுகிறது.

போட்டியில் மொத்தமாக 6 கி.மீற்றர் தூரம் வெற்றிக்கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும், ஆண்கள், பெண்கள் இருவரும் நிர்வாணமாக ஓட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை இதற்கு 600,000 பேர் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலைத்தளம் மூலம் இது குறித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், போட்டியாளர் மற்றும் பார்வையாளராக பல லட்சம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த போட்டியை நடத்தும் Hauts-de-France மாவட்ட Naturistes சங்க தலைவர் Philippe Lehembre கூறுகையில், இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்