அன்று கால்களை இழந்து தவித்த தமிழன்... இன்று பிரான்சில் தமிழர்களை பெருமையடைய வைத்த தருணம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிரான்சில் நடைபெற்ற உலக பாரா தடகள போட்டிக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்று போட்டியில் தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கலந்து கொண்டு தங்கபதக்கம் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் தமிழன் என்ற பெருமையை பெற்றுள்ள ஆனந்தனுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இராணுவத்தில் பணியாற்றி ஒரு காலை இழந்து அதன் பின் தன்னுடைய தன்னம்பிக்கையால் இப்போது தமிழர்களை பெருமையடை வைத்திருக்கும் ஆனந்த் பற்றி உறவினர்கள் கூறுகையில், ஆனந்தனுக்கு ஓட்டப்பந்தயம் என்றால் உயிர், அதில் சாதிக்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்தார்.

அதற்கிடையில் ராணுவத்தில் வேலை கிடைத்ததால், அவர் காஷ்மீர் எல்லையில் பணிபுரிந்து வந்தார் . உடலை எப்போது கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆனந்தின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எல்லையில் நடந்த சண்டையில் குண்டு வீசப்பட்டதால், அவரின் இடது கால் முற்றிலும் சேதமடைந்தது

இதனால் அவர் வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற, இவர் கும்பகோணத்திற்கு வந்த பின்பு தடகள போட்டியில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக செயற்கை கால் பொருத்தி அதன்மூலம் தடகள போட்டியில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என நினைத்தார். இதற்காக ராணுவத்தில் இருந்த முக்கிய அதிகாரிகளின் உதவியுடன் 25 லட்சம் செலவில் செயற்கைக் கால் பொருத்தினார்.

அதன் பின் கடுமையாக பயிற்சி செய்து வந்த இவர், ஆசிய அளவில் நடந்த தடகள போட்டியில் கலந்துகொண்டு பல பதக்கங்களை குவித்தார்.

தற்போது உலக பாரா தடகள தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். இவரை பிரதமர் மோடி அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கால் இல்லாத நிலையில் நீ எப்படி இதில் சாதிக்க முடியும் என்று உறவினர்கள் பலர் கூறிய போதும், அவர்களின் எண்ணத்தை எல்லாம் பொய்யாகி, இப்போது தங்கம் வென்று சாதித்து காட்டியுள்ள அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்