சேவலுக்கு கூவ அனுமதியளித்துள்ள நீதிமன்றம்: ஒரு வித்தியாச வழக்கும் தீர்ப்பும்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சேவல் மாரிசை உங்களுக்கு நினைவிருக்கிறதா? மாரிஸ் அதிகாலையிலேயே கூவி தங்களை தொல்லை செய்வதாகக் கூறி, அதன் உரிமையாளரான Corinne Fesseau மீது வழக்கு தொடர்ந்தனர், விடுமுறைக்காக பிரான்சின் Saint-Pierre d'Oleron என்ற பகுதிக்கு வந்திருந்த தம்பதியர்.

காலை நேர சூரியனைக் காண முடியாதவாறு மாரிசை இருட்டறையில் அடைத்து வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் மாரிசுக்கு ஆதரவாக, மனு ஒன்றில், உலகம் முழுவதிலுமிருந்து 160,000 பேர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் மாரிசை அமைதிப்படுத்தும்படி கோரியிருந்த தம்பதியின் புகாரை தள்ளுபடி செய்த நீதிமன்றம், திருமதி Fesseauக்கு வழக்கு செலவுக்காக 1,000 யூரோக்கள் வழங்குமாறும் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ள Fesseau, என்னால் ஒன்றுமே பேசமுடியவில்லை, இந்த தீர்ப்பு, என்னைப்போன்ற சூழலில் இருக்கும் மற்றவர்களுக்குமான ஒரு வெற்றி என்று கூறியுள்ளார்.

உள்ளூர் மேயரான Christophe Sueur வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கவே கூடாது, இது மக்கள் எந்த அளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது, நீங்கள் உள்ளூர் பாரம்பரியங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்