மது அருந்திவிட்டு 130 கிலோமீற்றர் வேகத்தில் கார் பந்தயம்.. வாகனங்களை இடித்துதள்ளிய நபர்கள்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் மது அருந்திவிட்டு கார் பந்தயம் மேற்கொண்ட இரு நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Vannes நகரில் நேற்றைய தினம் நள்ளிரவு போக்குவரத்து சாலையில் கார் பந்தயம் நடந்துள்ளது.

இரண்டு நபர்கள் மது அருந்திவிட்டு இந்த பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிக்கு சுமார் 130 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த அவர்கள், வீதிகளில் நின்றிருந்த 5 வாகனங்களின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூன்று இளைஞர்களை இதனை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கார் பந்தயம் மேற்கொண்ட இரண்டு நபர்களையும் பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த Vannes நகர துணை முதல்வர் Francois Ars, ‘இது பொறுப்பற்ற செயல்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்