மின்னல் வேகத்தில் வந்து சுக்கு நூறாக நொறுங்கிய கார்.. 22 வயது பிரான்ஸ் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்!

Report Print Kabilan in பிரான்ஸ்
268Shares

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் பார்முலா 2 கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா-ஸ்டாவோல்ட்டில் பார்முலா 2 கார் பந்தயம் நடந்து வந்தது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான அந்தோன் ஹுபர்ட்டும்(22) கலந்து கொண்டார்.

பல்வேறு கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வென்றுள்ள இவர், இந்த பந்தயத்தில் ஆக்ரோஷமாக தனது காரை ஓட்டினார்.

அனைத்து கார்களும் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஹுபர்ட்டின் கார் விபத்துக்குள்ளானது.

சுக்கு நூறாக அவரது கார் நொறுங்கியதைப் பார்த்து ரசிகர்கள் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹுபர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அமெரிக்க கார் பந்தய வீரர் ஒருவரும் இதில் படுகாயமடைந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்து நடக்கவிருந்த கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கார் பந்தயத்தில் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது, மற்ற வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹுபர்ட்டின் மறைவுக்கு பார்முலா போட்டியை நடத்தும் அமைப்பும், வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்