சுற்றுலா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் பிரத்யேக புகைப்படங்கள்: இப்படி அவரை பார்ப்பது அபூர்வம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சுற்றுலா சென்ற இடத்தில் சட்டையில்லாமல் இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் அபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன!

G7 உச்சி மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்களை வரவேற்பதற்கு முன்பு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் படகுப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

முதலில் இயந்திரப் படகொன்றில் மேக்ரானும் அவரது மனைவியும் பயணிக்க, பின்னர், லைஃப் ஜாக்கெட் ஒன்றை அணிந்துகொண்ட மேக்ரான் ஜெட் ஸ்கி ஒன்றில் ஏறிப் பறந்தார். அப்போது எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள்தான் இவை.

அவற்றில் மேக்ரான் கேஸுவல் உடையில் இருக்கும் படங்களும், சட்டையில்லாமல் இருக்கும் படங்களும், ஜெட் ஸ்கி ஒன்றில் பறக்கும் படங்களும் அடங்கும்.

இப்படி ஜாலியாக இருந்த மேக்ரானைத்தான் பிரேசில் ஜனாதிபதி கடுப்பேற்றி விட்டார்.

அமேசான் காடுகள் தீப்பற்றி எரிவது தொடர்பாக விவாதிப்பதற்காக, G7 உச்சி மாநாட்டிற்கு வருமாறு மேக்ரான் உலக தலைவர்களை வற்புறுத்தியது பிரேசில் ஜனாதிபதியை எரிச்சலூட்ட, மேக்ரானின் மனைவியின் வயதை கிண்டல் செய்து அவர் பேஸ்புக்கில் இடுகை வெளியிட்டதும் அதற்கு மேக்ரான் சுடச்சுட பதிலளித்ததும் நினைவிருக்கலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers