பொழுதுபோக்குக்காக அதிகபட்சம் கார்களை சேகரிப்பார்கள்: இவர் என்ன சேகரித்துள்ளார் பாருங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பொழுதுபோக்குக்காக சில பேனாக்களை சேகரிப்பார்கள், சிலர் செருப்புகளை சேகரிப்பார்கள், சிலர் மோட்டார் சைக்கிள்களை சேகரிப்பார்கள்.

அதிகபட்சமாக சிலர் கார்களை சேகரிப்பதுண்டு, சிலர் பழைய கார்களை, சிலர் புதிய கார்களை, அவரவர் வசதிக்கேற்றவாறு... ஆனால் பிரான்சில் ஒருவர் போர் விமானங்களை சேகரித்துள்ளார்...

ஒன்றல்ல, இரண்டல்ல, 110 போர் விமானங்களை சேகரித்துள்ளார் அவர்! பிரான்சைச் சேர்ந்த Michel Pont (87), உலகின் அதிக விமானங்களை சேகரித்து வைத்திருப்பவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தவராவார்.

1980களில் தனது பரம்பரை மாளிகையை பெற்ற அவர் வீட்டின் முன் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதுபோல் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளார்.

தனது விமானங்களை வகைப்படுத்தி வகைக்கொன்றாக ஒன்பது அருங்காட்சியங்களையும் அமைத்துள்ளார் Michel.

விமானங்கள் மட்டுமின்றி, சோவியத் ஹெலிகொப்டர் ஒன்று, ஹோவர்கிராஃப்ட் ஒன்று, ஒரு சேமிப்பகம் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள், 200 பழங்கால மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 36 பந்தயக் கார்கள் ஆகியவையும் அவரது சேமிப்பில் அடங்கும்.

2018ஆம் ஆண்டில் மட்டும் அவரது மாளிகையை 30,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers