ரசாயன உரத்திற்கு மாற்றாக மனித சிறுநீர்: பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சுவிஸ் விஞ்ஞானிகளுடன் இணைந்து பிரெஞ்சு விஞ்ஞானிகள் ரசாயன உரத்திற்கு மாற்றாக மனித சிறுநீரைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வில் இறங்கியுள்ளார்கள். பாரீஸில் அதற்கான ஆய்வுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

பாரீஸ் விஞ்ஞானியான Fabien Esculier, கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் கூடி இரண்டு வெவ்வேறு தோட்டங்களில் மனித சிறுநீரையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி காய்கறிகளை விளையச் செய்ததாகவும், இரண்டின் விளைச்சலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரசாயன உரங்களுக்கு பதிலாக மனித சிறுநீரை பயன்படுத்துவதில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

முதலாவது ரசாயன உரம் தயாரிக்க எண்ணெய் தேவை. எனவே சிறுநீரை உரமாக பயன்படுத்துவதால் எண்ணெய் இறக்குமதி குறையும்.

மேலும் உரத்திற்கு தேவையான பாஸ்பேட்டை தோண்டி எடுப்பதன் மூலம் ஏற்படும் மாசு குறையும்.

அத்துடன், சிறுநீரை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வதால், குடிநீர் மற்றும் கழிவு நீர் இரண்டுமே வீணாவது தவிர்க்கப்படுகிறது.

சிறுநீரில், உரங்கள் தயாரிப்பதற்கு தேவையான தனிமங்களாகிய நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

நாளொன்றிற்கு ஒரு மனிதன் குறைந்தது 500 மில்லிலிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறான்.

மேலும் விலங்குகளின் கழிவுகளை ஒப்பிடும்போது, மனித சிறுநீரில் 100 முதல் 10,000 மடங்கு வரை குறைவாகவே ஆண்டிபயாட்டிக்குகளும் உள்ளன.

எனவே பிரான்சும் சுவிட்சர்லாந்தும் சிறுநீரை உரமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்