பிரான்சில் அதிகரித்துள்ள மேக்ரானின் செல்வாக்கு.. கருத்துக்கணிப்பு தகவல்

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்துள்ளதாக, கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில், மேக்ரானின் செல்வாக்கு 23 சதவிதம் என்ற அளவில் குறைந்திருந்தது.

இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்காக Ifop என்ற நிறுவனம் மேக்ரானின் செல்வாக்கு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.

இது ஓகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 988 பேரிடம் எடுக்கப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பின் படி, மேக்ரானின் செல்வாக்கு ஓகஸ்ட் மாதத்தில் இரண்டு புள்ளிகள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மேக்ரானின் செல்வாக்கு தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. தற்போது மொத்தம் 34 சதவித பிரெஞ்சு மக்கள், மேக்ரானின் நடவடிக்கைகளில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

REUTERS/Philippe Wojazer

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்