மேக்ரான் முன்னிலையில் பிரித்தானியா பிரதமரின் தவறான செயல்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசியபோது, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்சில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மேக்ரானிடம் Joke ஒன்றைக் கூறி சிரித்த போரிஸ் ஜான்சன், அவருக்கு முன்னால் இருந்த மேசையின் மீது தனது காலை வைத்தபடி பேசினார்.

ஜான்சனின் நகைச்சுவையைக் கேட்டு மேக்ரான் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால், மேசையின் மீது ஜான்சன் கால் வைத்ததை பத்திரிகையாளர்கள் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.

இந்த விடயம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் பிரித்தானிய பிரதமரின் செயல் அமைந்ததாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்