காஷ்மீர் விவகாரத்தில் வன்முறையை தூண்டக் கூடாது.. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான்

Report Print Kabilan in பிரான்ஸ்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சாண்டிலி பகுதியில் உள்ள அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியறையில், சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களை இருவரும் ஒன்றாக சந்தித்தனர். அப்போது பேசிய மேக்ரான் கூறுகையில், ‘காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது. அந்த பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

Reuters

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமரிடமும் பேச உள்ளேன். அப்போது காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இரு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை கூறுவேன். இந்தியாவுக்கு வழங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானம் அடுத்த மாதம் விநியோகம் செய்யப்படும்’ என தெரிவித்தார்.

AP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்