பிரித்தானியா இளவரசரின் நண்பரால் பிரான்ஸ் சிறுமிகள் பாதிக்கப்பட்டனரா? விசராணைக்கு வலியுறுத்தல்

Report Print Basu in பிரான்ஸ்

அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துக்கொண்ட கோடீஸ்வரரும் சிறார் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனின், பிரான்சில் நடவடிக்கைகள் குறித்து விசாரணையைத் தொடங்குமாறு அந்நாட்டு குழந்தைகள் பாதுகாப்புக் குழு அழுத்தம் கொடுத்ததுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், அமெரிக்க நிதியாளரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

The Innocence en Danger குழு வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் மீது விசாரணையைத் தொடங்க பிரான்ஸை வலியுறுத்துமாறு பாரிஸ் பொது வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ளது. திங்களன்று, பிரான்சின் பாலின சமத்துவ அமைச்சர் மார்லின் ஷியாப்பா, பிரான்சில் எப்ஸ்டீனின் விவகாரங்கள் குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு கோரினார்.

பாரிஸிலிருந்து தனது தனியார் ஜெட் விமானம் மூலம் சென்று தரையிறங்கிய பின்னர் யூலை 6 ஆம் திகதி நியூ ஜெர்சியில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். தலைநகரின் மிகவும் பிரத்யேக முகவரிகளில் ஒன்றான அவென்யூ ஃபோச்சில் பாரிஸில் முகவரி வைத்திருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

66 வயதான எப்ஸ்டீன் 14 வயதிற்குட்பட்ட 12க்கும் மேற்பட்ட சிறுமிகளை உள்ளடக்கிய பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்று ஒப்புக் கொண்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்