லண்டன் அருங்காட்சியகத்தின் பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் குறித்த சில புதிய தகவல்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

லண்டனிலுள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகமான Tate Modern கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன், ஒரு பிரெஞ்சு குடிமகன் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலுள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகமான Tate Modernஐ காண்பதற்காக, பிரான்சிலிருந்து தனது குடும்பத்துடன் அவன் பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பத்தாவது மாடியிலிருந்து ஐந்து மாடியின் கூரையில் அவன் விழுந்ததும், அவனை 17 வயது இளைஞன் ஒருவன் தள்ளி விட்டதைக் கண்ட சக சுற்றுலாப்பயணிகள் உட்பட அங்கிருந்த மக்கள், அந்த இளைஞனை பிடித்து வைத்துக் கொண்டனர் கீழே விழுந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவர் போல கதறிக் கூச்சலிட்ட நிலையிலும், அவனை தள்ளி விட்ட அந்த இளைஞன் எந்த பதற்றமும் இன்றி இருந்திருக்கிறான்.

பொலிசார் அவனை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கீழே விழுந்த சிறுவனின் உயிருக்கு தற்போது ஆபத்து இல்லை என்றும், அவனது உடல் நிலை சீராக இருந்தாலும், இன்னமும் அவன் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் ஒருவேளை அங்கிருந்து சென்றிருந்தாலும், இனி பொலிசாரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த தகவல்களை அளித்து உதவலாம் என பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers