பிரான்ஸ் விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களால் மக்கள் படும் அவதி... தீர்க்கப்படுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் குறிப்பிட்ட விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களால் தங்களின் தூக்கம் கெடுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கடந்த ஜுலை மாதத்தில் இருந்து ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள், Saint-Maur (Val-de-Marne) நகருக்கு மேலாக பறக்கின்றன.

காற்று வீசும் திசை காரணமாக Saint-Maur நகருக்கு மேலாக கடல் மட்டத்தில் இருந்து 650 மீற்றர் உயரத்தில் விமானங்கள் பறந்து, மேலெழுகின்றன. இதனால் அந்த நகரில் 80 டெசிபல்கள் அளவு சத்தம் பதிவாகின்றது.

காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த விமான இரைச்சல்கள், நள்ளிரவு தாண்டியும் தொடர்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 600 விமானங்கள் வரை பறப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இது குறித்து விமானநிலையம் கூறுகையில், ஓர்லியில் அமைக்கப்பட்டுவரும் நான்காவது ஓடுதளத்தின் பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என்பதால், டிசம்பர் 2 ஆம் திகதி வரை இந்த பிரச்சனை நீடிக்க வாய்புள்ளது, அதன் பின் இந்த பிரச்சனை இருக்காது என்று தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்