ஆங்கிலக் கால்வாய் மீது பறந்து சாதனை படைத்த பிரான்ஸ் வீரர்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரெஞ்சின் பறக்கும் வீரரான Franky Zapata ஆங்கிலக் கால்வாய் மீது பறந்து சாதனை படைத்துள்ளார்.

பறக்கும் வீரராக வர்ணிக்கப்படுபவர் பிரான்சின் Franky Zapata. இவர் கடந்த ஜூலை 14ஆம் திகதி, சோம்ப்ஸ்-எலிசேயில் நகரில் நடந்த தேசிய நாள் நிகழ்வின் போது வானில் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர், கடந்த வாரம் அவர் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டிருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் பறக்கும் முயற்சியில் இறங்கினார் Franky Zapata. இதற்காக, பா-து-கலே மாவட்டத்தின் Sangatte நகரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.

ஆங்கிலக் கால்வாய் மீது தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் பயணித்த அவர், பிரித்தானியாவின் St Margaret's Bay நகருக்கு வந்து சேர்ந்தார்.

40 வயதான Franky Zapata இந்த சாதனையை செய்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்