பிரான்சில் இளவரசி போல் வந்து நகைகளை அள்ளிச் சென்ற பெண்கள்... அதன் மதிப்பு மட்டும் எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இளவரசி வேடமணிந்து சுமார் 1.3மில்லியன் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பார்சின் 1-ஆம் வட்டாரத்தின் rue Saint-Honoré வீதியில் இருக்கும் ஆடம்பர நகைகள் விற்பனைக் கடைக்கு புதன்கிழமை இரவு இரண்டு பெண்கள் வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைச் சேர்ந்த இளவரசி என கூறி, தங்களுக்கு சில நகைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கடையில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு நகைகளை காண்பித்துள்ளனர். அதில் சில நகைகளை தேர்ந்தெடுத்த அவர்கள், இரண்டு நாட்களில் பணம் செலுத்திவிட்டு நகைகளை பெற்றுக்கொள்கின்றோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்

ஆனால் இரண்டாம் நாள் பணம் அவர்களுக்கு மாற்றப்படவில்லை. அதன் பின்னரே அவர்கள் தேர்ந்தெடுத்த நகைகள் கொண்ட பெட்டியினை நகைக்கடை உரிமையாளர்கள் பார்வையிட்டனர். அதில் நகைகளுக்கு பதிலாக சில பெறுமதியற்ற கற்களை வைத்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 1.3 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கொள்ளையர்களை தேடி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்