50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நீர் மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு: பிரான்சில் விலகிய மர்மம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

1968ஆம் ஆண்டு காணாமல் போன பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று சுமார் 50 ஆண்டுகளுக்குப்பின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன கப்பலிலிருந்த தங்கள் உறவினர்கள் என்ன ஆனார்கள் என்ற 52 பேரின் உறவினர்களின் கேள்விக்கு நேற்று பதில் கிடைத்துள்ளது.

டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் அந்த Minerve என்னும் நிர்மூழ்கிக் கப்பல், 1968ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 17ஆம் திகதி பிரான்சின் தெற்கு கடற்கரைப்பகுதியில் 52 பேருடன் காணாமல் போனது.

தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல், தென் பிரான்சின் Toulon துறைமுகத்திற்கு 45 கிலோமீற்றர்கள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனக்கு பெரிய நிம்மதி, மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறேன் என்று கூறும் Herve Fauve, Minerve நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனின் மகன் ஆவார்.

பல ஆண்டுகளாக அந்த கப்பலை தேட வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டிருந்த Fauve, அந்த 52 பேரும் ஏதோ ஒரு வகையில் கைவிடப்பட்டதுபோன்ற உணர்வு இருந்து வந்தது என்கிறார்.

தனியார் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான Ocean Infinity என்னும் படகுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நீர்மூழ்கியைக் கண்டுபிடித்தது.

அந்த நீர்மூழ்கி, கடலுக்கடியில் 2,370 மீற்றர்கள் ஆழத்தில் உள்ளதாக மூத்த பிரெஞ்சு கடற்படை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Minerve எப்படி காணாமல் போனது என்று கண்டுபிடிக்கப்படவேயில்லை, என்றாலும், அது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி பல குடும்பங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டுவந்துள்ளது.

என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று கூறும் Therese Scheirmann-Descamps, காணாமல் போன கப்பலிலிருந்த Jules என்பவரின் மனைவி.

Toulonஇல் வசிக்கும் அவர் வீட்டின் சுவர்கள் முழுவதும், காணாமல் போன அவரது கணவரின் கருப்பு வெள்ளைப் படங்களால் நிறைந்துள்ளது.

சொல்ல முடியாத அளவுக்கு மனதுக்கு நிம்மதி கிடைத்துள்ளது, எனது பிள்ளைகளுக்கும், என்று கூறும் Therese, எனக்கு அப்படி ஒரு ஆச்சரியம், அப்படியொரு மகிழ்ச்சி என்கிறார்.

அந்த துயர சம்பவம் குறித்த விவரங்களை இணையதளம் ஒன்றில் சேகரித்து வைத்துள்ள Minerveஇன் கேப்டனின் மகனான Fauve, காணாமல் போனவர்களின் உடல்கள் கிடப்பதெல்லாம் நடக்கக்கூடிய விடயமல்ல என்கிறார்.

இன்னொருபக்கம், தான் இரண்டு வயதாக இருக்கும்போது Minerveஇல் தனது தந்தையை இழந்த Jacques Dannay என்பவர், அந்த படகை தேடும் முயற்சி தொடங்கப்பட்டபோது, நான் சொல்வது முட்டாள்தனமாகத்தான் இருக்கும், என்றாலும், என்னைப் பொருத்தவரை, அந்த கப்பலின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்கும் வரை எனது தந்தை இறக்கவில்லை என்றுதான் சொல்லுவேன் என்றார்.

யாராவது, அவர் உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் கூட நம்பியிருப்பேன் என்கிறார் Jacques.

மோசமான வானிலை நிலவும் நேரத்தில், பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, பிரான்சின் முக்கிய கடற்படை துறைமுகங்களில் ஒன்றான Toulonஇலுள்ள தனது தளத்திற்கு திரும்பும்போது Minerve மூழ்கியது.

இன்னொரு படகுடன் மோதியதாலோ, ஒரு ஏவுகணை தாக்கியதாலோ அல்லது நீர்மூழ்கியின் ஆக்சிஜன் வழங்கும் அமைப்பில் பிரச்சினை ஏற்பட்டதாலோ பிரச்சினை ஏற்பட்டதால் Minerve மூழ்கியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், Minerve மீட்டுக் கொண்டுவரப்படாது என்று தான் கருதுவதாக தெரிவிக்கும் Faure, ஆனால் அந்த நீர் மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், அது இருக்கும் பகுதிக்கு மேல், ஒரு நினைவு கூருதல் விழா ஒன்று நடத்தப்படலாம் என்கிறார்.

அது, அந்த கப்பலில் பயணித்தவர்களுக்கு, இறுதி பிரியா விடை கொடுப்பதற்காக என்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்