குழந்தைகளின் கண்முன்னே உயிரிழந்த தாய்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பிரான்சில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கிய தாய், குழந்தைகளின் கண்முன்னே இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் நடைபெற்று வரும் ஆப்பிரிக்க கிண்ணத்திற்கான போட்டியில் நேற்று ஐவரி கோஸ்ட் - அல்ஜீரியா அணிகள் நேருக்குநேர் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய அல்ஜீரியா அணி 4-3 என்கிற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட்டை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இதனை பிரான்சில் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். அப்போது திடீரென அந்த கொண்டாட்டம் வன்முறையாக மாறி கடைகள் சூறையாடப்பட்டன.

இதனை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி ரசிகர்களை விரட்டியடித்தனர். அந்த சமயத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 21 வயது ரசிகர் மோண்ட்பெல்லியர் பகுதியில் தாறுமாறாக காரை செலுத்தியுள்ளார்.

அந்த கார் குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த ஒரு தாய் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடைய 17 வயதான மகள் மற்றும் ஒரு வயது குழந்தை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களின் இத்தகைய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்சின் உள்துறை மந்திரி கிறிஸ்டோஃப் காஸ்டனர், சம்பவத்தில் ஈடுபட்டதாக 10 சிறுவர்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...