பிரான்சில் மகனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த பெற்றோர்... பொலிசாரிடம் சொன்ன காரணம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மகனை மரத்தில் கட்டி வைத்து தொலைப்பேசியில் வீடியோ எடுத்த பெற்றோரிடம் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்சின் Lens நகரிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. 12 வயதுடைய மகனையும், 10 வயதுடைய மகளையும் நிர்வாணமாக்கி, பெற்றோர் மரத்துடன் நிற்க வைத்து கயிற்றினால் சுற்றி கட்டிவைத்து, தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், இரண்டு சிறுவர்களையும் மீட்டதோடு, அவர்களின் பெற்றோர்களையும் கைது செய்தனர்.

சிறுவர்கள் உளநல சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தவறான வார்த்தை பிரயோகம் அதன் காரணமாகவே தண்டித்ததாக பொலிசாரிடம் காரணம் கூறியுள்ளனர்.

இருப்பினும் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்