என்ன நடக்கிறது நாட்ரி டாம் தேவாலயத்தில்?: புதிய புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாட்ரி டாம் தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் தலைமை கட்டிட வடிவமைப்பாளர், எந்த நேரமும் தேவாலய கூரையில் உள்ள சட்டங்கள் விழும் அபாயம் இருப்பதால் இப்போதைக்கு தேவாலயத்தினுள் செல்ல இயலாது என்று தெரிவித்துள்ளார்.

தீவிபத்தைத் தொடர்ந்து சில பாகங்கள் இடிந்து விழுந்தன, ஆனால் இனி என்னென்ன இடிந்து விழும் என்பதை கணிக்க முடியாததால் இந்த ஆண்டு இறுதி வரை அதற்குள் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் Philippe Villeneuve என்னும் அதன் தலைமை கட்டிட வடிவமைப்பாளர்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஐந்து ஆண்டுகளுக்குள் தேவாலயத்தை கட்டி எழுப்பிவிட வேண்டும் என்று கூறியிருப்பது உண்மைதான், என்றாலும், இப்போது அது திறந்த நிலையில் உள்ளது.

காற்றும், மழையும் கடுமையான வெயிலும் அதன்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது தெரியவில்லை.

இன்னும் சில மாதங்களுக்கு தீயால் மட்டுமின்றி, அதை அணைப்பதற்காக பயங்கர வேகத்தில் பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரும் கட்டிடத்தை எவ்வளவு பலவீனப்படுத்தியுள்ளன என்பதை கவனிக்க வேண்டும்.

அப்படியிருக்கும் நிலையில், வேலை செய்வதற்காக மனிதர்களை உள்ளே அனுப்புவது அபாயமானது.

இப்போது தேவாலயத்தின் பக்கங்களில் வளைவுகளைத் தங்கிப் பிடிக்கும் வகையில் மரச்சட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

அப்போதுதான் கட்டுமானப் பணியாளர்கள் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்று சேதத்தை அருகிலிருந்து பார்க்க இயலும்.

முதலில் தேவாலயம் மறுபடியும் கட்டி எழுப்பக்கூடிய அளவுக்கு தயாராக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று கூறும் Villeneuve, இப்போதைக்கு மீட்டெடுக்கும் பணிதான், அதற்குப்பின்தான் அதை ஆராயவே முடியும் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்