ஜன்னலை திறக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Aude மாவட்டத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன், ஜன்னலை திறக்க முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Aude மாவட்டம் Fabrezan எனும் சிறு கிராமத்தில், 4 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் ஜன்னலை திறக்க முற்பட்டுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளான்.

கிட்டத்தட்ட நான்கு மீற்றர்களுக்கும் அதிகமான உயரத்தில் இருந்து குறித்த சிறுவன் விழுந்துள்ளான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

துரிதமாக செயல்பட்ட அவர்கள், சிறுவனை மீட்டு Toulouseயில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு இச்சம்பவம் நடந்ததாக தீயணைப்பு படையினர் குறிப்பிட்டனர். இந்நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்