18 ஆண்டுகள் மருத்துவராக நடித்த ஒரு நபர்: உண்மை வெளியானதால் செய்த கோர செயல்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

18 ஆண்டுகள் மருத்துவராக நடித்த ஒரு நபர், உண்மை வெளியானதையடுத்து குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் படித்த, பிரான்சைச் சேர்ந்த Jean-Claude Romand (65), தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனக்கு உலக சுகாதார மையத்தில் வேலை கிடைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மையில் மருத்துவ பயிற்சியை முடிக்காமல் தினமும் காரில் சுவிட்சர்லாந்துக்கு சென்று ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் கார் பார்க்கிங்கில் உட்கார்ந்து நேரத்தைப் போக்கிவிட்டு வந்து விடுவது அவரது வழக்கம்.

இதற்கிடையில் உலக சுகாதார மையத்தில் பல திட்டங்களில் முதலீடு செய்வதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுண்டுகளை உறவினர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார் Romand.

பின்னர் ஒரு நண்பர் Romand உலக சுகாதார மையத்தில் வேலை செய்யவில்லை என்பதைக் கண்டறிய, அவரது உறவினர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

உண்மை வெளியே வந்ததையடுத்து பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத Romand, தனது உறவினர்களை ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

முதலில் தனது மனைவியான Florence Crolet, பின்னர் இரு மகள்கள் Antoine (5) மற்றும் Caroline (7) ஆகியோரைக் கொலை செய்திருக்கிறார்.

பின்னர் 50 மைல்கள் காரில் பயணித்து தனது பெற்றோரான Aimé மற்றும் Anne-Marie Romand ஆகியோரையும் அவர்களது லாப்ரடார் நாயையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டுக்கு திரும்பிய Romand, தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு, தான் இருந்த வீட்டைக் கொளுத்தியிருக்கிறார்.

ஆனால் துரதிர்ஷடவசமாக அவரை மக்கள் காப்பாற்றி விட்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இது நடந்தது 1996இல்.தற்போது சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் Romand

65 வயதாகும் Romand, இரண்டாண்டுகள் தொடர்ந்து பொலிசாரால் கண்காணிக்கப்படுவதோடு, நீதிமன்றம் அனுமதித்த இடத்தில்தான் அவர் இனி வாழ வேண்டும்.

இதற்கிடையில், Romand சிறையிலிருக்கும்போது திருந்தி, கடவுள் நம்பிக்கையுடையவராகி விட்டார் என்று கூறப்படுகிறது.

அவரது கதை பிரான்சில் புத்தகங்களாக வெளி வந்துள்ளதோடு, திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்