பிரான்சிஸ் நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. குழந்தைகள், முதியவர்களுக்கு ஆபத்து

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வெப்ப அலை காரணமாக, பிரெஞ்சு வானிலை முன்னறிவிப்பாளர் மெட்டோ பிரான்ஸ், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாவது உயர் எச்சரிக்கையான ஆரஞ்சு அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் அனைத்து வாரமும் வெப்ப அலைகளின் போது வெப்பநிலை 40 டிசிரி செல்சியஸில் இருந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பாக நகரங்களில் அதிக ஈரப்பதத்துடன் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-க்கு சமமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, கணிக்க்கப்பட்டுள்ள வெப்ப நிலை 2003 ஆம் ஆண்டின் வெப்ப அலைகளுடன் ஒப்பிடப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை காரணமாக பிரான்சில் 15,000 இறப்புகளை ஏற்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ உதவிக்காக மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் Agnès Buzyn தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers