120 நாடுகளுக்கு சென்றுள்ள எலிசபெத் மகாராணியின் மனதுக்கு பிடித்த வெளிநாடு இதுதானாம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் வலிமையான உறவு வைத்திருக்கும் பிரித்தானிய மகாராணியார் 120 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தாலும், ஒரு நாட்டை மட்டும் தனது மனதுக்கு நெருக்கமானதாக கருதுகிறாராம்.

மிக நீண்ட காலம் மகாராணியாக பொறுப்பு வகித்து வரும் எலிசபெத் மகாராணியின் மனதில் அப்படி இடம் பிடித்த அந்த நாடு பிரான்ஸ் நாடுதானாம்.

ராஜ குடும்ப சரிதைகளை எழுதும் எழுத்தாளரான Robert Hardman, சரளமாக பிரெஞ்சு மொழி பேசும் மகாராணியாரை பிரான்ஸ் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை என்கிறார்.

Marc Roche என்னும் ராஜ குடும்ப சரிதைகளை எழுதும் எழுத்தாளர், மகாராணியாருக்கு எப்படி பிரான்ஸ் பிடித்துப்போனதோ அதேபோல பிரான்சுக்கும் அவரைப் பிடித்துப்போனது என்கிறார்.

மகாராணியார் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், விமுறைக்காக என்று சென்றது சில நாடுகளுக்குத்தான் என்று கூறும் Marc Roche, அவைகளில் பிரான்சும் ஒன்று என்கிறார்.

மகாராணியார் விரும்பி அதிகமுறை சென்ற நாடு பிரான்ஸ்தான் என்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers