பிரான்ஸ் அமைச்சர் பெயரில் பல கோடிகளை இழந்த உலகின் பெரும் செல்வந்தர்கள்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் போன்று வேடமிட்டு மர்ம நபர் ஒருவர் உலகின் பெரும் செல்வந்தர்களிடம் இருந்து பல கோடிகளை சுருட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரான்சின் வெளிவிவகார அமைச்சரான Jean-Yves Le Drian என்பவரின் முகமூடி அணிந்த நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நபர் உலகின் பெரும் செல்வந்தர்கள் பலரையும் ஏமாற்றி சுமார் 70 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளார்.

அதில், ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முக்கிய தலைவராக கருதப்படும் ஆகா கான் சுமார் 15 மில்லியன் பவுண்டுகளை அந்த மோசடி நபரிடம் இழந்துள்ளார்.

ஆகா கான் மட்டுமின்றி, துருக்கி நாட்டின் முக்கிய தொழில் அதிபர் ஒருவரிடம் இருந்து 30 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக மோசடி செய்துள்ளார்.

மட்டுமின்றி Château Margaux vineyards உரிமையாளர்களிடம் இருந்து 3 மில்லியன் யூரோ வரை மோசடி செய்துள்ளார்.

2016 மற்றும் 2017 காலகட்டத்தில் நடந்த இந்த பண மோசடிகளில், பிரான்ஸ் அரசாங்கம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய நபர்களை மீட்க இந்த தொகையை பயன்படுத்த இருப்பதாக அந்த நபர் இவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தொகை தொடர்பில் எந்த சிக்கலும் ஏற்பட கூடாது என்பதால் சீனாவில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை பரிமாற்றம் செய்ய கோரியுள்ளார்.

பண மோசடிக்கு முன்னர், அமைச்சர் Le Drian நட்பு வட்டத்தில் ஒருவர் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து இவரது கோரிக்கையை அமைச்சரே நேரிடையாக காணொளி அழைப்பு மூலம் முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் முகமூடி அணிந்த நபர், அமைச்சரின் அலுவக அறையில் இருந்து பேசுவது போலவே ஜோடித்துள்ளார்.

இதனால் பண மோசடியில் சிக்கிய எவருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை என்பது மட்டுமல்ல, எவரும் அமைச்சரிடம் அடையாளம் கேட்கவும் முன்வரவில்லை.

திரைப்பட பாணியில் நடந்த இந்த நூதன மோசடி தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers