புலம்பெயந்தோருக்கு தண்ணீர் வழங்கவேண்டும்: கலாயிஸ் முகாம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வசிக்கும் முகாம் ஒன்றில் போதுமான தண்ணீர் வசதி செய்து தருமாறு பிரான்சின் உச்ச நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் புலம்பெயர்ந்தோருக்கு தண்ணீர் கூட வழங்கப்படாதது அடிப்படை உரிமைகளை மீறலாகும் என்று விமர்சித்திருந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நிர்வாக நீதிமன்றமாகவும் செயல்படும் மாகாண கவுன்சில், அந்த புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் போதுமான அளவு தண்ணீர் வசதி செய்து கொடுப்பதற்காக அதிகாரிகளுக்கு எட்டு நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

அத்துடன் அந்த 700 புலம்பெயர்ந்தோருக்கும் அவர்களது உரிமைகள் குறித்த தகவல்களை அவரவர் தாய் மொழியில் அளிக்க வேண்டும் என்றும் மாகாண கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளாக Grande-Synthe பகுதியிலும், அதற்கருகிலுள்ள வனப்பகுதியிலும், எப்படியாவது பிரித்தானியாவிற்குள் நுழைந்து விடும் நோக்கில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கிறார்கள்.

2008ஆம் ஆண்டு அவர்களுக்காக உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நிறுவ நகராட்சி முடிவு செய்தது.

ஆனால் அங்கு போதுமான தண்ணீர் மற்றும் கழிவறை வசதி போதுமானதாக இல்லை என்று கூறியுள்ள மாகாண கவுன்சில், தண்ணீர் குழாய்கள், ஷவர்கள் மற்றும் கழிவறைகளை அமைத்துக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers